இந்த கட்டுரை 2020 ஏப்ரல் மாதத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. தற்போது சில தகவல்கள் மொழிபெயர்ப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன
கொள்கை வகுப்பவர்களுக்கானதொரு குறிப்பு
இதை எழுதும் நேரத்தில் உலகளாவிய ரீதியில் 1,100,000 க்கும் அதிகமான நோயாளர்களும் மற்றும் 64,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களும் உள்ளன . 1மானுடம் ஒரு உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. சுகாதாரத் துறை, பாதுகாப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் தங்கள் அர்ப்பணிப்புக்காக பாராட்டையும் நன்றியையும் பெற வேண்டும்.
இது போன்ற ஒரு நெருக்கடி சூழ்நிலையில், மனித உயிர்களைப் பாதுகாப்பதே முதல் முன்னுரிமையாகும். இது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறது. பாடசாலைகளும் பணியிடங்களும் மூடப்பட்டுள்ளன, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஒரு முடக்கம் என்ற வடிவில் நடைமுறையில் இருப்பதால், பொருளாதார நடவடிக்கைகள் நின்றுபோய்விடும் நிலையை அண்மித்துள்ளன. குறிப்பாக, நமது சனத்தொகையில்2 கிட்டத்தட்ட 30% மற்றும் மொத்தத் தேசிய உற்பத்தியில் 38% ஆகவுமுள்ள மேல் மாகாணமானது உயர்ந்தளவு அபாயமுள்ள இடமாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளது.3 பொருளாதாரத் திணறல் மற்றும் தொற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் பிரதிபலிப்புக்கள் தீவு முழுவதும் எதிரொலிக்கும். பொது சுகாதாரம் முதன்மை அக்கறையுடன் இருக்க வேண்டும், பொருளாதார அழுத்தம் கிட்டத்தட்ட சமமான அவநம்பிக்கையான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
போரின் முன்னணியில் இருப்பவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவான புரிதல் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இது போன்ற அவசரகால சூழ்நிலைகளில் கொள்கை முடிவுகள் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வரலாறு காட்டுகிறது.
கொவிட்-19 தொற்றுநோயை இலங்கை கையாள்வதால், கடினமான முடிவுகளை எடுப்பதற்கு கொள்கை வகுப்பாளர்களுக்கு உள்ளீடாக நாங்கள் பின்வருவனவற்றை வழங்குகிறோம்.
இலங்கையின் பொருளாதார நிலைமை பற்றியதொரு கண்ணோட்டம்
பலவீனமான பொருளாதார நிலைமைகளுடன் இலங்கை நெருக்கடிக்கு வந்தது. 2019 ஆம் ஆண்டில் எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி 2.6%4 ஆக இருந்தது. சுற்றுலா போன்ற முக்கியமான துறைகள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களிலிருந்து இன்னும் மீண்டு வருகின்றன. குறுகிய கால செலவின உயர்வு நடுத்தர முதல் நீண்ட காலத்திற்கு பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பிறகு சுற்றுலாவின் வருவாய் கணிசமாகக் குறைவடைந்துள்ளது. சுற்றுலாவின் உடனடி எதிர்காலம் நன்றாக இல்லாதிருப்பதுடன் 2019 ஆம் ஆண்டில் வருமானம் 10% ஆல் குறைவடைந்துள்ளது5.
ஒட்டுமொத்தமாக எங்கள் ஏற்றுமதிகள் சென்மதி நிலுவையில் நடப்புக் கணக்கிற்கு உதவுவதற்குப் போதுமான அளவு உயரவில்லை. இதற்கிடையில், நமது அந்நிய செலாவணி ஒதுக்கமானது கடன் வாங்கிய நிதியின் ஒரு பகுதி உட்பட சுமார் 7.0 பில்லியன் டொலராகவே உள்ளது. 6 இறுதியாக, எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் 2020-20237 ஏறத்தாழ 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பாரிய கடன் மீளச் செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கொவிட் 19 இலங்கை பொருளாதாரத்தில் கணிசமான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தாக்கத்தில் வேலை நாட்களின் இழப்பு காரணமாக வெளியீட்டில் நேரடி வீழ்ச்சி மற்றும் வைரஸ் பரவலைத் தடுப்பதற்குரிய பௌதீக இடைவெளி, உடனடி அவசரத் தேவையைக் கையாளுவதற்கான மருத்துவம் மற்றும் பிற செலவுகள் என்பன உள்ளடங்கும். வருமானத்தில் உடனடி விளைவு இருக்கும் என்றாலும், வைரஸ் பரவுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் கொள்கைகளிலிருந்து நடுத்தர மற்றும் நீண்ட கால விளைவுகள் இருக்கும். தைத்த ஆடைத் துறையைப் நோக்குகையில் கொவிட் -19 உருவாக்கிய பொருளாதார செலவுகளைக் காணத் தொடங்கினோம். இலங்கையிலிருந்தான மொத்த ஏற்றுமதியில் 42% கணக்கில்8, இந்தத் துறையானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்9 வருவாய் இழப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8% உள்ள வெளிநாட்டிலிருந்து உட்பாய்ச்சப்படும் பணம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது10, இது அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும். பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வாழ்வாதாரங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடுவது கடினம், ஆனால் நமது உழைக்கும் மக்கள்தொகையில் 66% பங்காகவுள்ள முறைசாரா துறையில் உள்ளவர்கள்11, மிகவும் பாதிக்கப்படுவர் என்பது தெளிவானதாகும். சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின்படி, இலங்கையின் உழைக்கும் மக்கள் தொகை 8 மில்லியன் பேரில், 2.6 மில்லியன்12 பேர் விவசாய மற்றும் விவசாயம் அல்லாத துறைகளிலுள்ள சுயதொழில் புரிவோர் ஆவர். தற்போது நாட்டில் விவசாய நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதால், 1.5 மில்லியன்13 விவசாயம் அல்லாத சுயதொழில் புரிவோர் இந்த முடக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 3.5 மில்லியன்14 தனியார் துறை ஊதியம் பெறுபவர்களும் பொருளாதார அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஏனெனில் கம்பனிகள் வரையறுக்கப்பட்ட பணப்புழக்கத்தின் போது மறுசீரமைப்பு மற்றும் ஆட்குறைப்புக்களை மேற்கொள்ளும்.
பொருளாதாரத்திற்கான இந்த அதிர்ச்சியானது நாம் சந்தித்ததை உலகளாவிய நிதி நெருக்கடியை (2008-2012) விட பெரியதும் மற்றும் ஆழமானதுமாகும். நிதி நெருக்கடியைப் பொறுத்தவரையில், நேரடியாக பாதிக்கப்பட்ட நாடுகள் கொவிட் -19 ஐ விட மிகக் குறைவாகவே இருந்தன, மேலும் இந்த தொற்றானது உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பிலிருந்து இலங்கைப் பொருளாதாரம் முழுமையாக மீள முன்னர் அதைத் தொடர்ந்து வந்துள்ளது.
குறுகிய காலப் பிரச்சினைகளைக் கையாளுவதற்குத் தற்போது காணப்படும் பொறிமுறைகளைப் பயன்படுத்துதல்
உள்ளூர் வாக்கெடுப்பு நிறுவனமான வான்கார்ட் சர்வேயின் சமீபத்திய கணக்கெடுப்பில், குறைந்த பட்சம் மக்கள் தொகையில் கால் பகுதியினர் தேவையான உணவு அல்லது மருந்தை அணுகுவதற்குக் கஷ்டப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.15 ஒரு பெரிய வயது முதிர்ந்த சனத்தொகையுடன் காணப்படும் இலங்கையர்கள் வழக்கமான மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
பொருட்களை வழங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் அரசாங்கத்தின் மையப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகுமுறையினால் நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு முனையிலும் பிழியப்படுகின்றனர்.
தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சமூகத்தின் உடனடி பாதுகாப்புக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. மக்கள் பரிமாறிக் கொள்ள சுதந்திரமாக இருக்கும்போது பொருளாதாரம் செயல்படுகிறது. நாட்கள் வாரக்கணக்குகளாக முடக்கம் காணப்படும் போது, குடிமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விட சிக்கலான தேவைகள் அதிகமாக இருக்கும்.
பொருளாதாரத்தின் சில பகுதிகள் குறைந்த ஆபத்தில் இயங்குவதற்கும், ஊரடங்கு உத்தரவை மீறுவதற்கான சலுகைகளை குறைப்பதற்கும், அத்தியாவசிய சேவைகளின் வரையறையை விரிவாக்குவதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
இது வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் அதிக உற்பத்தித்திறனுடன் அவ்வாறு செய்ய அனுமதிக்கும், அதே நேரத்தில் பொருளாதாரம் இயங்குவதற்கான சில இடங்களையும் உருவாக்குகிறது. விநியோகப் பணியாளர்கள் உட்பட விநியோக சங்கிலி பாத்திரங்களுக்கான ஊரடங்கு உத்தரவுகளில் மீளமுடியாத மற்றும் நிலையான கொள்கையை உருவாக்குவது நுகர்வோர் மற்றும் இந்த நேரத்தில் தங்கள் உற்பத்திகளை நுகர்வோரின் கைகளில் ஒப்படைக்க முடியாதுள்ள உற்பத்தியாளர்கள் மீதான அழுத்தத்தை எளிதாக்கும்.
தற்போதுள்ள வழிமுறைகள் மற்றும் சந்தைகள் நெருக்கடிக்கு முன்னர் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது. தற்போதைய நிலைமைகளின் கீழ், அவற்றை அரசினை மையப்படுத்திய தீர்வுகளால் பிரதியீடு செய்வதை விட, இந்தச் செயல்முறையை எளிதாக்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கானதொரு வழிகாட்டும் வரைபடம்
தொற்றுநோய்க்கான கொள்கைப் பிரதிபலிப்புக்களை கட்டங்கட்டமாகச் சிந்திப்பது பயனுள்ளதாகும். முதல் கட்டத்தில் ஊரடங்கு உத்தரவு மூலம் மக்களில் பெரும்பாலோருக்கு சுய தனிமைப்படுத்தலின் ஒரு மூலோபாயத்தைப் பயன்படுத்தி வைரஸ் பரவுவதை மெதுவாக்குவதே இதன் நோக்கம். எனினும், ஊரடங்கு உத்தரவை என்றென்றும் நீடிக்க முடியாது, ஏனெனில், இது ஒரு குறிப்பிடத்தக்க மனித மற்றும் பொருளாதார செலவை ஏற்படுத்துகின்றது. எனவே பொருளாதாரத்தைப் படிப்படியாக திறக்க 2 ஆம் கட்டமொன்றை அனுமதிக்கும் வெளியேறும் மூலோபாயத்தில் அரசாங்கம் செயல்படுகிறது. கொவிட்-19 ஐத் தணிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் வினைத்திறன்மிக்க கருவிகள் கிடைக்கும் வரை இந்த இரண்டாம் கட்டத்திற்கு இன்னும் கடுமையான பௌதீக இடைவெளி மற்றும் பிற பாதுகாப்பு தேவைப்படும்.
புரிந்துகொள்ளத்தக்க வகையில், அவசரகால நிலைமை சீரற்ற கொள்கைக்கு தன்னை ஆளாக்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரு சீரற்ற வகையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகின்றது. தற்காலிக கொள்கை என்பது திட்டமிடுவதற்குக் கடினமானதாகும், இது அனைத்து இலங்கையர்களிடமும் நாட்டின் பொருளாதாரத்திலும் அடுத்தடுத்த பரந்த விளைவுகளை ஏற்படுத்தும்.
குறுகிய கால அவசரகால நிலைமை சீரடையத் தொடங்கும் போது, கொள்கை வகுப்பாளர்கள் தொற்றுநோயியல் நிபுணர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், தனியார் துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து மீண்டும் திறப்பதற்கு வழிகாட்டும் ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டும். இது மக்களுக்கும் வணிகங்களுக்கும் அவர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான செலவைக் குறைப்பதற்காக அவர்களின் செயல்பாடுகளை திறம்பட திட்டமிட உதவும்.
பரிசோதனையை விரிவுபடுத்துவதற்கான செயல்திட்டம்
"கண்டுபிடித்தல்- பரிசோதித்தல் – சிகிச்சையளித்தல் (trace - test – treat)" முறையானது தென் கொரியா மற்றும் பிற நாடுகளில் வினைத்திறன் மிக்கது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. சமூகத் தொற்று ஏற்படுமா எனக் கண்டறிவதற்காக பரி சோதனையை விரிவுபடுத்துவதற்கான மார்ச் 31 ஆம் திகதிய16 அரசாங்கத்தின் தீர்மானமானது சரியான திசையிலான ஒரு படியாகும்.
தற்போதுள்ள சோதனைத் திறனைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் போதுமான அளவு செயல்படுகிறதா என்று சுயாதீன மருத்துவ பயிற்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA), இலங்கை மருத்துவ சங்கம் போன்ற பிற குழுக்களும் விரிவாக்கப்பட்ட பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. தற்போது, தொற்றுநோயியல் பிரிவின் வரையறைக்குட்பட்ட பரிசோதனை17 (இடைக்கால விடய வரையறைகள்) வழிகாட்டுதல்களின்படி பரிசோதனையானது, கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் -19 நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களிடையே மேற்கொள்ளப்படுகின்றது. கடுமையான நிமோனியா நோயாளிகள் (வேறு நோய்க் காரணங்கள் மூலம் விளக்கமுடியாத) மற்றும் அறிகுறிகளுடன் கூடியவர்கள், பரிசோதிப்பது பொருத்தமானது என ஒரு மருத்துவர் இனங்கண்டால் கூட பரிசோதனை செய்யலாம். காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளை அனுபவிக்கும் நபர்களை உள்ளடக்குவதற்காக இந்த வரையறை விரிவாக்கப்பட்டது, ஆனால் லேசான அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கும் சோதனைக்கு அணுகல் இருப்பதை உறுதிப்படுத்த இந்த வரையறை விரிவாக்கப்பட வேண்டும்.
சாங்கம், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நாட்டின் தற்போதைய சோதனைத் திறனைப் பயன்படுத்த ஒரு தெளிவான மற்றும் கவனம் செலுத்தும் செயல் திட்டத்தை கொள்கை வகுப்பாளர்கள் உருவாக்குவது முக்கியமானதாகும். நாட்டில் அதன் சோதனைத் திறனைப் பெறுவதற்கும் விரிவாக்குவதற்கும் சர்வதேச விநியோகச் சங்கிலிகள் மற்றும் சாத்தியமான நன்கொடையாளர்களுடன் ஈடுபடுமாறு அரசாங்கம் தனியார் துறையை ஊக்குவிக்கலாம்.
முகக் கவசங்களை அணியும் கொள்கையை மீள்பரிசீலித்தல்
தனிநபர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பயணங்களைக் கொண்டிருத்தல், கடுமையான சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணிவதைப் பின்பற்றுதல் ஆகியவற்றிலே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுப்பது தங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின்உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்னவென்றால், நீங்கள் ஒரு மருத்துவ பணியாளர் அல்ல, உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், நீங்கள் முகக் கவசம் அணியத் தேவையில்லை, இந்த பரிந்துரையானது உலகளாவிய முகக் கவசங்களின் பற்றாக்குறையால் இயக்கப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.18
மிக சமீபத்தில், அமெரிக்கா அவர்களின் நிலைப்பாட்டை மாற்றியது, அவர்களின் நோய்க் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் முகக் கவசங்களின் பயன்பாட்டைப் பின்வருமாறு கூறிப் பரிந்துரைத்தது.
“சமீபத்திய ஆய்வுகள் கொரோனா வைரஸின் குறைந்த அறிகுறிகள் (“அறிகுறியற்றவர்கள்”) மற்றும் அறிகுறிகளை இறுதியில் காட்டுபவர்கள் (“அறிகுறிக்கு முன்பு”) அறிகுறிகளைக் காண்பிக்கும் முன் வைரஸைப் பரப்பலாம் என்று காட்டுகின்றன. இதன் பொருள், அருகிலேயே தொடர்பு கொள்ளும் நபர்களிடையே வைரஸ் பரவக்கூடும் - உதாரணமாக, பேசுதல், இருமல் அல்லது தும்மல் - அந்த நபர்கள் அறிகுறிகளை வெளிப்படுத்தாவிட்டாலும் கூட வைரஸ் பரவக்கூடும். இந்த புதிய சான்றுகளைக் கருத்திற்கொண்டு, விசேடமாக குறிப்பிடத்தக்க சமூக அடிப்படையிலான நோய்ப் பரவல் உள்ள பகுதிகளில், பிற சமூக இடைவெளி நடவடிக்கைகளை பராமரிப்பது கடினமான பொது அமைப்புகளில் துணியிலான முகக் கவசங்களை அணியுமாறு கட்டுப்பாட்டு மத்திய நிலையமானது பரிந்துரைக்கிறது(உ.ம். மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள்).”19
முன்னணியில் இருப்பவர்கள் பாதுகாக்கப்படுவது அவசியம் என்றாலும், பரவலான முகக் கவசங்களின் பயன்பாடு நோயின் பரவலைக் குறைக்கும் என்பது பொதுவான மருத்துவக் கருத்தாகும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த நெருக்கடியின் முன்னணியில் சுகாதாரப் பணியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் முகக் கவசங்களை வழங்குவதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாலும், ஒருவரின் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் பொதுவில் முகக் கவசப் பயன்பாட்டிற்காக பொது மக்களுக்கான பரிந்துரை இருக்க வேண்டும். முகக் கவசத்தை அணிவது தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்தல், மற்றும் விரைவாக அதிகரிக்கும் முகமூடி உற்பத்தியில் தனியார் துறையுடன் தீவிரமாக ஈடுபடுதல் மிக முக்கியமானதாகும்.
சந்தைகளைச் செயற்பட வைத்தல்
இந்த நெருக்கடியின் பொருளாதார விளைவுகளை நிர்வகிப்பது அரசாங்கத்தின் முக்கிய இலக்கு மையமாக இருக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கத்தை மென்மையாக்குவதற்கும், வரவிருக்கும் மாதங்களில் இலங்கை பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறுகிய கால பொருளாதார தாக்கத்தை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்றாலும், இன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நடுத்தரத்திலிருந்து நீண்ட காலத்திற்கு பிரச்சினையை அதிகரிக்காதிருப்பது மிக முக்கியமாகும்.
விலைக் கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதும் அவற்றின் நடுத்தர மற்றும் நீண்டகாலத் தாக்கத்தினை விளங்கிக்கொள்ளலும்
அரசாங்கம் ஏற்கனவே பலவகையான பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எட்வகாடா நிறுவக ஆய்வு காண்பித்தபடி, சாதாரண காலங்களில் கூட இந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் அரசியல் அரங்காக செயல்படுகின்றன, அரசாங்கத்தின் சொந்த தரவு பல நுகர்வோர் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட விகிதத்திற்கு மேல் விற்கப்படுவதைக் காட்டுகிறது. ஒரு முடக்கத்தின்போது, விலைக் கட்டுப்பாடுகள் விநியோக தடைகளை அதிகப்படுத்தும். பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, விலை என்பது ஒரு ஊக்கத்தொகையால் சுற்றிவைக்கப்பட்ட ஒரு சமிக்ஞையாகும். இது பற்றாக்குறையையும் மிகைகளையும் சமிக்ஞை செய்கிறது, ஒரு உற்பத்தியாளருக்கு இலாபம் ஈட்ட முடியாவிட்டால், அவர்கள் சிக்கல் மற்றும் ஆபத்தைச் சந்தித்துப் பொருளைப் பெறமாட்டார்கள். நிச்சயமாக அவசரகால சூழ்நிலையில் இது பற்றாக்குறையை மட்டுமே ஏற்படுத்தும்.
எதிர்வரும் மாதங்களில், நாம் ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார வீழ்ச்சியைக் காணலாம், இதன் போது மேலும் விலைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் விரும்பக்கூடும். பொருளாதார மீட்புக்கான விரைவான பாதை சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் - பாதிக்கப்படக்கூடிய மக்கள் அளவுக்கதிமாகப் பாதிக்கப்படுவதால், குறுகிய காலத்தில் பாதுகாப்பு வலையமைப்புக்களை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த முடியும்.
திட்டமிட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செல்லல்
அந்நியச் செலவணி வீதத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், உள்ளூர் விவசாயத் தொழிலைப் பாதுகாப்பதற்கும் ஒரு முயற்சியாக, அத்தியாவசியமற்ற அனைத்து இறக்குமதியையும் நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.20 இதை எழுதும் வரை, இந்த அறிக்கையை மத்திய வங்கி அல்லது நிதி அமைச்சு உறுதிப்படுத்தாமையானது, கொள்கை நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. ஒரு குறுகிய கால நடவடிக்கையாக, ரூபாயைப் பாதுகாப்பதற்காக, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படாத அந்த பொருட்களின் எதிர்மறை பட்டியலை அறிமுகப்படுத்துவது பரிசீலிக்கப்படலாம், இருப்பினும் இது ஒரு குறுகிய கால கால அளவிலான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
நீடித்த இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அரசாங்கம் விதித்த ‘அத்தியாவசிய பட்டியல்கள்’ நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் முக்கிய விநியோகச் சங்கிலிகளின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தொடர்ச்சியான விளைவுகளை உருவாக்கும். நமது ஏற்றுமதி தொழில்கள் மற்றும் உற்பத்தித் துறைக்குப் புத்துயிரளித்தல் இலங்கையில் பொருளாதார மீட்சிக்கு முக்கியமாக இருக்கும். 201721 ஆம் ஆண்டில் இலங்கையின் இறக்குமதியில் 46% இடைநிலை பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகும், மேலும் நீண்ட கால இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த நெருக்கடி கடந்தபின்னர் உள்ளூர் வணிகங்களின் இழப்புகளை மீட்டு இழப்புகளை ஈடுசெய்யும் திறனை பாதிக்கும். இது உள்நாட்டு சலுகைகளை போட்டி அல்லாத இறக்குமதி மானியங்களுக்கு சாதகமாக்கும், இதன் மூலம் போட்டிப் பிரதியீட்டுப் பொருள் இறக்குமதி ஊக்குவிக்கப்பட மாட்டாது.
மீட்டெடுப்பை நோக்கி நகருதல்
முன்னோக்கிச் செல்லும்போது, நம்பத்தகுந்த பேரினப் பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் பணவியல் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை ஆகியன ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். கொவிட்-19 காரணமாக குறுகிய காலத்தில் அதன் செயல்திறன் குறைவாக இருக்கும் என்றாலும், தற்போதைய சிரமங்களை சமாளிக்க உறுதியான அரசாங்கத்திற்கு இது சமிக்ஞை செய்யும்.
இலங்கையின் பொது நிதி நிலைமை நம்பிக்கைக்குரியதல்ல. கொவிட் -19 நெருக்கடிக்கு பிரதிபலிப்புச் செய்யும் வகையில் அரசாங்க செலவினங்களில் செங்குத்தான உயர்வைக் காண்போம், மேலும் ஒரு சாதாரண ஆண்டிற்கான செலவினங்களுடன் வேகத்தைத் தக்கவைக்காத அரசாங்க வருவாய் இந்த விஷயத்தில் பரிதாபகரமாக போதுமானதாக இருக்காது. பலவீனமடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் புத்துணர்ச்சியுடன் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், அரசாங்கம் புதிய வரிக் குறைப்புகளை அறிமுகப்படுத்தியதால், பொது நிதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போதைய சூழலில், எங்களிடம் இருந்து பெறுவதற்கு குறைந்த வரி அடித்தளமேயுள்ளது. அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கக்கூடிய மோசமான வணிக செயல்திறனால் இது மேலும் அதிகரிக்கக் கூடும்.
உடனடி செலவினங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கடன் திருப்பிச் செலுத்துவதை அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும், இது 2020 ஆம் ஆண்டில் 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். இந்த திருப்பிச் செலுத்துதலுக்கான எங்கள் திறன் கேள்விக்குரியதாகவுள்ளதுடன் கொவிட் – 19 இனைக் கருத்திற்கொண்டு மேலும் கடன் நிவாரணம் கோருவதற்கு சர்வதேச நன்கொடை நிறுவனங்களை ஜனாதிபதி அணுகியுள்ளார். 22
எமது பொருளாதார யதார்த்தம் என்னவென்றால், ஒரு நல்ல சீர்திருத்த தொகுப்பின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வெளி நிதி பெற வேண்டும். கடன்களை வழங்குவதை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான ஈடுபாடுகளை நாம் தீவிரமாக ஆராய வேண்டும். மிகவும் தேவைப்பட்ட 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்23 பெறுமதியான விரைவான உலக வங்கி திட்டத்தை இப்போது பெற்றுள்ள நிலையில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு உறுதியான ஈடுபாட்டை நோக்கி செயல்பட வேண்டும். திறைசேரி பெரும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் நிதி ஆதாரமாக இருப்பதைத் தவிர, ஒரு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமும் நாட்டிற்கு தேவையான நிதி ஒழுக்கத்தை கொண்டு வரும். ஒட்டுமொத்த பேரினப் பொருளாதாரக் கொள்கையானது பணவீக்கம் மற்றும் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையை நிலையானதாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் இது உண்மையான துறைரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேவையான சூழலை உருவாக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளின் இலவச பரிமாற்றத்தை உறுதி செய்வதற்கான வர்த்தக சீர்திருத்தம் மற்றும் வணிகங்களை மீட்க மற்றும் மறுதொடக்கம் செய்ய உதவும் உள்நாட்டு ஒழுங்குமுறை சீர்திருத்தம் ஆகியன முன்னுரிமை வழங்கப்படும் மையங்களாக இருக்க வேண்டும்.
மீட்புக்கான பாதையில் தனியார் துறைப் பங்கேற்பு முக்கியமானது. சுயாதீன எண்ணம் கொண்ட நிபுணர்களுடனான தெளிவான, நிலையான ஈடுபாடு, மற்றும் இந்த நபர்களை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் ஆலோசனைத் இயல்திறனில் உள்ளடக்குவது அரசாங்கத்திற்கு நம்பகத்தன்மையை வழங்குவதுடன் ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதில் இலங்கை தீவிரமாக இருப்பதற்கான சமிக்ஞையாகவும் அமையும்.
நாடுகளை ஒப்பிடல் (2020.04.07 ஆம் திகதியன்று )