Social Distancing

சமூக இடைவெளி ஆனால் பொருளாதார ஒருங்கிணைவு

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Social distancing but economic convergence

- தனநாத் பெர்னான்டோ

புதிய கொரோனா வைரஸ் (கொவிட் -19) உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, சமீபத்திய வரலாற்றில் இது மூன்றாவது முறையாக பயங்கரவாதி அல்லாத எதிரிக்கு எதிராக நாம் போராட வேண்டியிருந்தது. முதலாவதாக, 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் சுனாமி எங்கள் கரையில் மோதியது, பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டெங்கு தீவிரமாகப் பரவியதுடன் இப்போது இந்த வைரஸ் பரவுகையாகும். அதேசமயம், எங்களுக்கு 30 வருடகால பயங்கரவாதப் போர் இருந்தது, அதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன்பு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்தன. சுருக்கமாக, முன்னெப்போதையும் விட அதிகமான தேசிய அவசரநிலைகள் இருப்பதாகத் தெரிகிறது.

இத்தகைய நெருக்கடிகளின் போது, ​​ஒரு நாடாக தனிமைப்படுத்தப்படுவதும், தன்னிறைவும் இத்தகைய வெளிப்புற அதிர்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த தீர்வுகள் என்று உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற வெளிப்புற காரணிகளால் நமது உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இந்த முடிவுக்கு செல்வது இயற்கையானது.

இருப்பினும், இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சிறந்த கதை பௌத்த ஜாதகக் கதைகளிலுள்ள  “சம்மோதன ஜாதக” - வேட்டைக்காரன் மற்றும் பறவைகள் கூட்டத்தின் கதையாகும். வேட்டைக்காரன் பறவைகள் கூட்டத்திற்கு வேட்டைக்காரன்  அச்சுறுத்தலாக இருந்ததுடன் பறவைகள் தனிப்பட்ட திசைகளில் பறந்தமையால் வேட்டையாடுபவரின் வலையில் சிக்கிக்கொண்டன. இது சில தடவைகள் நடந்த பிறகு, பறவைகள் மூலோபாயமொன்றை வகுத்தன; அனைவரும் ஒன்றாக வலையை நோக்கி ஒரே திசையில் பறந்து, ஒரு மரத்தை நோக்கி தங்கள் சொண்டுகளால் இழுத்து வந்து, தப்பின. பொருளாதார தனிமை, சுய-நிலைத்தன்மை மற்றும் உலகமயமாக்கலிலிருந்து விலகிக்கொள்ளல் ஆகியவை தீர்வுகள் என்று தோன்றினாலும், உண்மை என்னவென்றால், முன்பை விட ஒன்றோடொன்று ஒன்றோடொன்று இணைந்திருக்கும் உலகில், அது நேர்மாறானதாகும்.

பொருளாதாரப் பாதிப்பு

இது உலகளாவிய சவால் என்பதால் கொவிட் -19 இன் தாக்கம் தனித்துவமானது. கொவிட் -19 இன் பொருளாதார தாக்கம் உள்நாட்டிலும் உலக அளவிலும் கடுமையாக இருக்கும். நகரங்களை மூடுதல் மற்றும் முடக்குதல் காரணமாக கேள்விப் பக்கத்தில், நுகர்வு கடுமையாக வீழ்ச்சியடையும். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% பங்களிக்கும் உலகத் தொழிற்சாலையாகிய சீனா, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விநியோகச் சங்கிலிகள் மற்றும் உற்பத்தி வலையமைப்பு இணைப்புக்கள் தற்போது செயற்படாததால் வழங்கல் பக்கத்தில், கடுமையான வீழ்ச்சி ஏற்படும்.

இலங்கையர்களைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தைகளில் (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) குறைந்த நுகர்வு, தொற்று பயம் காரணமாக நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் போதல் மற்றும் உலகளாவிய  உற்பத்தி வலையமைப்பினுள் குழம்பியுள்ளதால் விநியோகச் சங்கிலிகளைப் பராமரிப்பதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளுதல்  போன்ற காரணங்களால் நமது தைத்த ஆடை வர்த்தகம் அபாயத்தை எதிர்நோக்கும். எங்கள் பெரும்பாலான உணவு ஏற்றுமதிகள் மற்றும் எமது  ஏற்றுமதிப் பொருள் தொகுதியிலுள்ள பல பொருட்களைப் பொறுத்தவரையில் இது உண்மையாகும்.

மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவில் வைரஸின் தாக்கம் காரணமாக கருத்தில் கொண்டு எங்களுக்கு வரும் பணம் தொடர்ந்தும் குறைவடையும். இந்தத் தொடர்ச்சியான எதிர்வினையானது மக்கள் தங்கள் வாகன குத்தகை தவணைகளை செலுத்த முடியாத நிலை அல்லது வங்கி கடன் தவணை செலுத்துதல்களைத் தவறுதல் வரை தொடர்கிறது. பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் என்பன எட்ட முடியாததாகிவிடும்.

வேலையின்மை அதிகமாக இருக்கும் மற்றும் செயல்படாத கடன்கள் அதிகரிக்கும். சுற்றுலா மேலும் பாதிக்கப்படுவதுடன் சுற்றுலாவுடன் தொடர்புடைய அனைத்து விநியோகச் சங்கிலிகளும் அதே கீழ்நோக்கிய போக்கில் தொடரும். அரசாங்கத்தின் தலையீட்டின் அடிப்படையில் பணவீக்கம் உயரும். இந்த நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில் நமது நிதி நிலையை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் அளவில் பெரிய பொதுத் துறையை பாதுகாத்தல் குறித்து இலங்கை அரசு தீவிரமான கேள்விகளை எதிர்கொள்ளும். இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன் உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து பொருளாதாரங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

விலைக் கட்டுப்பாடு தீர்வாகாது

கடந்த செவ்வாய்க்கிழமை (17) இரவு, பொருளாதாரம் குறித்த சில நிவாரண நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜனாதிபதி அறிவித்தார். வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளைத் தனிமைப்படுத்தும் செயல்முறைக்கு அரசாங்கம் வழங்கும்  வசதியளித்தலானது பாராட்டத்தக்கதாகும். இருப்பினும், முகக் கவசங்கள், பருப்பு மற்றும் தகரத்திலடைத்த மீன் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் விலைக் கட்டுப்பாடுகள் ஏழைகளுக்கு உதவாது. இது வெறுமனே இருப்பில் இருக்கும் பொருட்களை  இறாக்கைகளிலிருந்து வேகமாக அப்புறப்படுத்தும்.

எந்தவொரு விற்பனையாளரும் எந்தவொரு பொருளையும் அதன் உண்மையான விலையை விடக் குறைந்த விலையில் விற்க விரும்புவதில்லை. மார்ச் முதல் வாரத்தில் மைசூர் பருப்பின் விலை வரம்பானது ரூபா. 124-200 ஆகவிருந்ததுடன்  ஒரு 425 கிராம் தகரத்திலடைத்த மீனின் விலை சுமார் ரூ. 220-300 ஆகவிருந்தது. எனவே, பருப்பு மற்றும் தகரத்திலடைத்த மீனைக் கட்டுப்பாட்டு விலையில் முறையே ரூபா. 65 மற்றும் ரூபா. 100 இற்கு விற்பதற்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும். இதன் விளைவுகள் என்னவென்றால், விற்பனையாளர்கள் சட்டரீதியான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக இவற்றை விற்பதை நிறுத்திவிடுவார்கள், இது ஏழைகளையும் பணக்காரர்களையும் தாக்கும், ஏனெனில் இறாக்கைகளில் அவர்கள் வாங்குவதற்கு எதுவும் இருக்காது, சந்தையை முழுவதுமாக சிதைத்து, அல்லது அரசாங்கத்தின் நோக்கத்தை தோற்கடித்து விற்பனையாளர்கள் தொடர்ந்தும் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். 

முகமூடிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் இதேபோன்ற நிலை ஏற்பட்டதுடன் அவை ஏற்கனவே மருந்தகங்களில் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக அரசாங்கம், தகரத்திலடைத்த மீன் மற்றும் மைசூர் பருப்பு ஆகிய இரண்டிற்குமான இறக்குமதித் தீர்வையை குறைத்திருக்க முடியும், ஏனெனில் அதனைத்  இப்போது தாமதித்து முகமூடிகளுக்குச் செய்திருக்கிறார்கள். இது நுகர்வோருக்கு விலைச் சலுகைகளை வழங்க  வழிவகுப்பதுடன் விநியோகத்தையும் உறுதி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தகரத்திலடைத்த மீன் வகைகளுக்கும் அண்ணளவாக 35% தீர்வைக் கட்டணத்தை நாங்கள் செலுத்துகிறோம் என்பதை உங்களால் நம்ப முடியுமா?

வியாழக்கிழமையன்று  இலங்கை மத்திய வங்கி எமது நாணயமாற்று வீதத்தைப் பாதுகாக்க மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இது மீண்டும் ஏழைகளையும் வருமானம் குறைந்தவர்களையுமே அதிகம் பாதிக்கும். இப்போது வாகனங்கள் அதிக வருமானம் ஈட்டுபவர்களால் மட்டுமல்ல, நுண் மற்றும் சிறு தொழில் முனைவோரினாலும் தங்கள் தொழில்களை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களும் அவர்களது ஊழியர்களும் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்கள். சுவ்ரக  (SUV) வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் சமாளித்துக்கொள்வார்கள்.

உலகளாவிய ஒத்துழைப்புக்கான தருணம்

நிலையான மற்றும் குழப்பமான செய்தி ஊட்டங்கள் ஒன்றிணைந்து நாடுகளாக, நாம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உணரவைத்தன. இருப்பினும், உலகளாவிய சமூகமாக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. இந்த பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கு இந்த தொற்றுநோயிலிருந்து மீளவும், எதிர்கால சவால்களைத் தவிர்ப்பதற்கு மேலும் ஒத்துழைக்கவும் முழு உலகமும் நமக்குத் தேவைப்படுகின்றது. எமது செயல்பாடுகளைத் தொடங்குவதற்காக உலகின் பிற பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட எமது வழங்குனர்கள் மீள்வதும் அவர்களின் பணிக்குத் திரும்புவதும் எமக்கு அவசியமாகின்றது. எமது தயாரிப்புகள் சிறப்பாக இருக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் வேகமாக நகருவதற்கு எங்களுக்கு கொள்வனவுத் திறன் தேவை. கொவிட் -19 க்கான தடுப்பூசி நம்முடையதை விட அதிக இயல்திறன் கொண்ட விஞ்ஞானிகளால் முடிவு செய்யப்பட்டவுடன், அதை நம் மக்களுக்கு வியாபாரம் செய்யவும் கொள்வனவு செய்யவும் முடியும். தனியாக நாம் எல்லா சவால்களையும் எதிர்கொள்ள முடியாது என்பதற்கு இந்தத் தொற்றுநோய் நல்லதொரு நினைவூட்டலாகும். சுதந்திரத்தின் முக்கியத்துவமும், நமது சுதந்திரத்தை பொறுப்புடன் உரிமையாக்குவதும் இப்போது நமக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளன.

கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்குச் சீனா , இத்தாலி மற்றும் அமெரிக்காவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது. ரோமானிய கவிஞர் அன்னியோ செனெகாவின் ஒரு மேற்கோளாகிய “நாங்கள் ஒரே கடலில் இருந்துவரும் அலைகள்" என்பது அந்த பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இதேபோன்ற முறையில், ஜப்பான் சீனாவுக்கு சில மருத்துவ பொருட்களை நன்கொடையாக அளித்தது, பின்வரும் சீனக் கவிதை அதன் உறையில் எழுதப்பட்டதாகக் கூறப்பட்டது: “எங்களுக்கு வெவ்வேறு மலைகள் மற்றும் ஆறுகள் இருப்பினும், நாங்கள் ஒரே சூரியன், சந்திரன் மற்றும் வானத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.”

இந்த கொவிட் -19 தொற்றுநோய் பரவலானது நாம் அனைவரும் ஒரே கடலில் இருந்து வரும் அலைகள் என்பதையும்  நாம் அனைவரும் ஒரே சூரியன், சந்திரன் மற்றும் வானத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் நினைவூட்டுமாக.