இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Sacrificing food security for self-sufficiency
- தனநாத் பெர்னான்டோ
70 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பின்னர் “தன்னிறைவு” என்ற மூடநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சியில் கிட்டத்தட்ட முழு மக்கள்தொகையையும் விட்டுச்சென்றதுடன் ஆளும் உயரர்மட்டத்தினரின் வயிற்றை நிரப்பியது. "தன்னிறைவு" என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. இலங்கை பூஜ்ஜிய வர்த்தகத்துடன் மற்றும் சர்வதேச வரைபடத்தில் ஒருபோதும் காணப்படாத ஒரு சகாப்தத்திற்கு ஒரு கருத்தியல் இட்டுச் செல்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஒருவர் பயிரிட்டவைகளை மாத்திரம் உட்கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. பின்னர் மாற்று வாதங்கள் எழுந்தன- உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒருவருக்கு தன்னிறைவு தேவை; உணவில் தன்னிறைவு பெற வேண்டும், ஆனால் எரிபொருள், நிலக்கரி, மருந்து, மூலப்பொருட்கள் மற்றும் பிற "அத்தியாவசியப் பொருட்களை" இறக்குமதி செய்யலாம் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர் . எங்கள் வர்த்தக பற்றாக்குறை எங்கள் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டதுடன் நமது ஏற்றுமதி திறனை அதிகரிப்பதற்கு நாம் தன்னிறைவு பெற வேண்டும் என்று நம்புகிற மற்றவர்களும் இருக்கிறார்கள்,. எல்லா வாதங்களிலும், உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் பிரபலமானது. எனவே, உணவுப் பாதுகாப்பு குறித்த தரவுகள் மற்றும் வரையறைகளை ஆராய்ந்து இலங்கை உண்மையிலேயே “தன்னிறைவு” பெற முடியுமா என்பதை மதிப்பீடு செய்வோம்.
உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன?
"உணவுப் பாதுகாப்பு" என்ற பிரபலமான நம்பிக்கையானது, ஒரு நெருக்கடியின் போது நமது நுகர்வுக்கு போதுமான உணவைக் கொண்டிருக்க வேண்டுமென்பதாகும். தற்போதைய உலகளாவிய COVID-19 நெருக்கடியானது ஒரு முக்கிய உதாரணமாகும். ஆறு மாதங்கள் நீடிக்க போதுமான உணவு இருப்பினை வைத்திருத்தல் மற்றும் நாட்டின் பிராந்திய எல்லைகளுக்குள் தேவையான கலோரி அளவை உற்பத்தி செய்யும் திறனே உணவுப் பாதுகாப்பு குறித்த மற்றொரு பொதுவான கட்டுக்கதையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் உலக உணவு உச்சி மாநாடு ஆகியன உணவுப் பாதுகாப்பை பின்வருமாறு வரையறுத்துள்ளன: “அனைத்து மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தானதும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அவர்களின் உணவுத் தேவைகளையும் உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்கின்றதுமான உணவுக்கான பௌதீக மற்றும் பொருளாதார அணுகலைக் கொண்டிருக்கும்போது உணவுப் பாதுகாப்பு உள்ளது ”
பிரபலமான நம்பிக்கை இருந்தபோதிலும், உணவுப் பாதுகாப்பை அடைவதற்கு, அக்கறை கொண்ட நாடு அதன் எல்லைக்குள் தேவையான உணவை உற்பத்தி செய்யத் தேவையில்லை. முக்கியமானது தேவையான உணவை அளவிலும், விரும்பிய தரத்திலும் சிக்கனமாக உற்பத்தி செய்வதாகும். இல்லையெனில், எங்கள் விலைமதிப்பற்ற மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை வீணாக்குவோம். இதற்கு இலங்கையின் 65,610 சதுர கிலோமீற்றர்களுடன் ஒப்பிடும்போது வெறும் 725.7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூரை உதாரணமாக எடுத்துக் கொள்ளவும். வணிக வேளாண்மை இல்லாத போதிலும், இரண்டாவது வருடமாகவும் உலகளாவிய உணவு பாதுகாப்பு குறிகாட்டியில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஏனென்றால், சிங்கப்பூர் உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியுடன் முழுமையாக ஒருங்கிணைந்து, வெளிப்புற அதிர்ச்சிகளின் போது தனது குடிமக்களுக்கு உணவளிக்க போதுமான இருப்பினை உருவாக்கியுள்ளது. இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) வரையறுக்கப்பட்ட, பாதுகாப்பான, போதுமான மற்றும் நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் உணவை உட்கொள்ள முடியும். ஒப்பீட்டளவில் அதே குறிகாட்டியில் இலங்கை 66 வது இடத்தில் உள்ளது. சக இலங்கையர்களுக்கு எல்லா நேரங்களிலும் பௌதீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உணவு கிடைப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) வரைவிலக்கணத்தின்படி, கொவிட்- 19 நெருக்கடியின் போது தெளிவாகத் தெரிவது என்னவென்றால், நம்மிடம் பௌதீக ரீதியாக உணவு இருந்தாலும், ஒரு நாடு என்ற வகையில் நமது உணவுப் பாதுகாப்பு, விநியோகப் பிரச்சினைகள் காரணமாக இந்த உணவுக்கு ரீதியான அணுகல் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்களின் அன்றாட ஊதியங்கள் தடைப்படுவதாலும் உணவு விருப்பத்தெரிவுகள் இல்லாததாலும் மக்கள் உணவுக்கான பொருளாதார மற்றும் பௌதீக ரீதியான அணுகல்கள் இரண்டையும் இழக்கின்றனர். பண்டாரநாயக்க அரசாங்கம் பின்பற்றிய தோல்வியுற்ற சோசலிச சோதனை மேற்கூறியவற்றில் எதையும் அடையத் தவறிவிட்டது. குறைந்தபட்சம் உணவு போதுமானதாக இல்லை; தெரிவு ஒரு கனவாக இருந்ததுடன் தரம் ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு குடிமகன் அதை விட மேலதிகமாக எதையாவது வைத்திருந்து கைது செய்யப்பட்டால், அது ஒரு கொடூரமான குற்றமாகக் கருதப்பட்டு அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். மாவு பூச்சிகளாலும் மற்றும் அரிசி கற்களாலும் பழுதடைந்தது, மற்றும் மண்ணெண்ணெய் வாசனை மற்றும் விறகு அடுப்புக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பவர்களால் தீப்பற்றும் அபாயத்துடன் துணிமணிகள் இருந்தன. குறைந்த தரத்திலான பாணிற்காக உலகில் மிக நீண்ட வரிசைகளில் நாம் காத்திருந்தோம். அதுவும் உங்கள் குடும்பத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே ஒரு இறாத்தல் பாணிற்காக மட்டுமே நாம் காத்திருந்தோம். சுருக்கமாக, நகர்ப்புற சமூகத்திற்கு (பெரும்பான்மையானவர்கள் உணவு வாங்க பணம் வைத்திருந்த இடத்தில்), பௌதீகரீதியான அணுகல் மற்றும் விருப்பத்தேர்வுகள் இல்லாததால் உணவுப் பாதுகாப்பு சவாலுக்குட்பட்டது, அதே நேரத்தில் கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட சமூகங்களின் உணவுப் பாதுகாப்பு வருமானம் மற்றும் விருப்பத்தேர்வுகள் இல்லாததால் சவாலுக்குட்பட்டதுடன் அவர்கள் தங்கள் தோட்டங்களில் கிடைக்கக்கூடிய அல்லது காடுகளில் வளர்ந்த அனைத்தையும் உட்கொண்டனர். ஆகவே, உணவுப் பாதுகாப்பு என்பது தன்னிறைவு பெற முயற்சிப்பதன் மூலம் நாம் அடையக்கூடிய ஒன்றல்ல என்பது வெளிப்படையானது, ஏனெனில் அணுகல், மலிவு, பாதுகாப்பு, விருப்பத்தேர்வுகள் மற்றும் போசணைப் பெறுமதி போன்ற பல கூறுகள் உள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பின் படி (FAO) ஒரு நபரின் சராசரி தினசரி சக்தித் தேவையானது 1,680 கிலோகலோரியாகவிருப்பதுடன் இலங்கையில் இந்த வரையறையை விட சராசரியாக 500 கிலோகலோரி அதிகமாக உள்ளது, ஆனால் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர தரவுகளின்படி, இலங்கை முழுவதும் ஏழ்மைத் துறையில் இந்த சக்தி உள்ளெடுத்தலானது உலக தரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. ஆகவே, நீண்ட காலத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து நாம் தீவிரமாக இருந்தால், தன்னிறைவுக்கான வீழ்ச்சியில் வாழ்வதை விட, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை நம் மக்கள் வாங்க முடியும் என்பதையும், அணுகலைப் பராமரித்து, தெரிவையும் உறுதிப்படுத்த வேண்டும். இதை அடைவதற்கு, உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலிகளுக்கு பாதுகாப்பான அணுகலை நாம் உருவாக்க வேண்டும், இதன் மூலம் நமது மக்கள் அவர்களது சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான பல்வேறு வகையான உணவுகளை (சமநிலையான உணவு)வாங்க முடியும். ஒருவரிடம் காணப்படக் கூடிய அடுத்த கேள்வி என்னவென்றால், இது நம்முடைய எல்லா உணவுகளையும் இறக்குமதி செய்யப் போகிறோமா என்பதும், நமக்குத் தேவையான அனைத்தையும் இறக்குமதி செய்ய போதுமான அந்நிய செலாவணி உள்ளதா என்பதும் ஆகும்.
குறைந்த விவசாய உற்பத்தித்திறன்
மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கு, நமது விவசாயத்தில் (துறை) உற்பத்தித்திறன் ஏன் குறைவாக உள்ளது என்பதை நாம் சரிபார்க்க வேண்டும். எங்கள் நெல் வயல்களை தொழில்நுட்பம் எட்டாமையானது பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட பொதுவான சாக்காகும். ஆனால் தொழில்நுட்பம் நெல் வயல்களை எட்டாததற்கான காரணத்தைப் பற்றி நாம் சிந்தித்துள்ளோமா? இலங்கையில் 6.5 மில்லியன் ஹெக்டெயர் நிலத்தில், 5.4 மில்லியன் ஹெக்டெயர் நிலம் அரசுக்குச் சொந்தமானதாகும். சதவீத அடிப்படையில், தனியார் நிலங்கள் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 18% மட்டுமேயாகும். விவசாயிகள் அதிக அறுவடை தரக்கூடிய நெல் பயிரிட வேண்டுமானால் அசாங்க அலுவலகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும். விவசாயிகளுக்கு அவர்கள் பயிரிடும் நிலத்திற்கு உரித்து வழங்கப்படாததால், பெரும்பாலான நெல் நிலங்களுக்கு வங்கி கடனுக்கான அணுகல் மிகவும் குறைவாகவே உள்ளது. சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதால் நெல் வயலில் எந்தவொரு கட்டுமானமும் செய்ய முடியாது. தற்போதைய ஒழுங்குபடுத்தல் விதிமுறையின்கீழ், எந்த முதலீட்டாளரும் பச்சைவீட்டுப் பண்ணை அல்லது உயர் தொழில்நுட்ப பண்ணையில் முதலீடு செய்ய மாட்டார்கள். மேற்கூறியவற்றிற்கு மேலதிகமாக, பெரும்பாலான நெல் நிலங்கள் துண்டாடப்பட்டுள்ளன, எனவே உற்பத்தி செலவுகள் அதிகமாக இருக்கும் ஒரு பெரியளவிலான விவசாய செயல்பாட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் மீண்டும் தன்னிறைவுக்குச் சென்று எங்கள் கொல்லைப்புறங்களில் பயிரிட்டாலும், நம்முடைய முழு நிலத்தின் ஐந்தில் ஒரு பகுதியை மட்டுமே பயிரிடவும், வீடுகளை கட்டவும், மற்ற அனைத்து தொழில்துறை வேலைகளையும் செய்ய வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், எமது ஊழியர் படையில் சுமார் 25% விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம், ஆனால் நமது பெரும்பாலான நிலங்களை பயனற்றதாக விட்டுவிட்டு, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7-8% மட்டுமே பங்களிப்பு செய்கிறோம்.
உணவு இறக்குமதி மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை
நாம் எவ்வளவு வளமானவர்களாக இருந்தாலும் தீவிர தன்னிறைவு என்பது ஒரு விருப்பமல்ல, ஏனெனில் நமக்கு தேவையான அனைத்தையும் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்பது தெளிவானதாகும்- உதாரணம் - எரிபொருள் மற்றும் இயந்திரங்கள். எங்கள் வர்த்தக பற்றாக்குறையை குறுகியதாக வைத்து அதை மிகையாக மாற்றுவதற்கான ஒரே வழி நமது ஏற்றுமதியை மேம்படுத்துவதாகும். ஏற்றுமதியும் இறக்குமதியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். எங்களால் உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகள் அல்லது போட்டி நன்மை இல்லாத தயாரிப்புகளை நாங்கள் இறக்குமதி செய்கிறோம். எங்களுக்கு போட்டி நன்மை உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்கிறோம். ஏன் உலகளாவிய ஒத்துழைப்பால் மட்டுமே உணவுப் பாதுகாப்பை அடைய முடியும் என்பதை சுருக்கமாகக் கூறும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஒரு பிரித்தெடுப்பு பின்வருமாறு: “உலகளாவிய உணவு வர்த்தகம் தொடர்ந்து செல்ல வேண்டும். மக்கள் சாப்பிடும் ஒவ்வொரு ஐந்து கலோரிகளில் ஒன்று குறைந்தது ஒரு சர்வதேச எல்லையையாவது தாண்டியுள்ளது, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 50% க்கும் அதிகமாகும். ” எனவே, நமது ஏற்றுமதியை வளர்ப்பதற்கான நமது இயலாமை மற்றும் பாரம்பரியமாக மந்தமான அணுகுமுறை நமது மக்களின் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள உணவு பாதுகாப்பிற்கான வர்த்தக சமரசமாக இருக்கக்கூடாது.