Tariffs

வரிகள் மற்றும் தீர்வைகள் பற்றிய நன்கு முன் கூட்டிய திட்ட மிடப்படாத சட்டத்தின் விளைவுகள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Tariffs and the law of unintended consequences

– அனீதா வருசவிதாரண

திட்டமிடப்படாத விளைவுகளின் சட்டம் எடம் ஸ்மித்துக்கு முந்தைய ஒரு கோட்பாடாகும், ஆனால் சமூகவியலாளர் ராபர்ட் கே. மேர்டன் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. சுருக்கமாக, செட்ரிஸ் பரிபஸின் கோட்பாட்டினை (பிற காரணிகளை நிலையானதாக வைத்திருத்தல்) ஒரு சந்தை சூழ்நிலையில் அடைய முடியாது என்பதால், விளைவுகளின் தொகுப்பை உருவாக்க அரசாங்கங்கள் தலையிடுவதன் பெறுபேறாக எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்படுகின்றன.

காலனித்துவ இந்தியாவும் நாகப் பாம்புகளும்

இது பிரித்தானியர் முதன்முதலில் இந்தியாவை காலனித்துவப்படுத்திய காலத்திலிருந்தே காணப்பட்ட இந்த சட்டம் ‘கோப்ரா எஃபெக்ட் (Cobra Effect)’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்த விஷப் பாம்புகள் குறித்து ஆங்கிலேயர்கள் புரிந்துகொள்ளக்கூடிய அக்கறை கொண்டிருந்தனர், நாகப்பாம்புகள் தெளிவாக சில கவலைகளுக்குக் காரணமாக இருந்தன.  இதற்கு அவர்கள் முன்வைத்த தீர்வு என்னவென்றால், கொல்லப்பட்ட ஒவ்வொரு நாகப்பாம்பிற்கும் ஒரு வெகுமதியை வழங்கியமை அருகிலுள்ள எந்தவொரு நாகத்தையும்  கைப்பற்றி கொல்ல உள்ளூர் மக்களுக்கு தெளிவான ஊக்கத்தை வழங்கியது. இது குறுகிய காலத்தில் நன்றாகச் செயற்பட்டாலும், ஆர்வமுள்ள நபர்கள் நாகப்பாம்புகளைத் தீவிரமாக இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்பதை ஆங்கிலேயர்கள் மெதுவாக உணர்ந்தனர்; இது ஊக்குவிப்பு வெகுமதிகளைச் சேகரிக்கும்  மிகவும் இலாபகரமான வணிகத்தை உருவாக்கியது. இது தொடர்பாகத்  தெளிவடைந்ததுடன், பிரித்ததானியர்கள் ஊக்குவிப்பு வெகுமதிகளை அகற்றினர். அப்போது இது ஒரு இலாபகரமான முயற்சியாக இல்லாதிருந்தமையால், இனப்பெருக்கம் செய்து வளர்த்தவர்கள் தங்கள் எல்லா நாகப்பாம்புகளையும் விடுவித்தனர். இதன் இறுதி விளைவாகப் பொது நாகப்பாம்புகளின் தொகை அதிகரித்தமையானது இது எதனை அடையவேண்டுமெனத் தலையீடு மேற்கொள்ளப்பட்டதோ அதற்கு முற்றிலும் எதிரானதாகும்.

இது ஒரு நல்ல கதைக்கு வழிவகுக்கும் அதே வேளையில், திட்டமிடப்படாத விளைவுகளின் சட்டத்தின் பொருளாதார யதார்த்தங்கள் பெரும்பாலும் மிகவும் மோசமானவையாகவுள்ளன. சந்தையில் தலையீடுகள் பெரும்பாலும் நன்கு திட்டமிடப்பட்டவையாகவிருந்த போதிலும் பின்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. இதற்கு ஒரு பிரகாசமான உதாரணம் தீர்வைவரிகள் விடயமாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையானது,  அண்மையில் அமெரிக்காவில் விதிக்கப்பட்ட ஒரு சலவை இயந்திரங்களுக்கான தீர்வையின் எதிர்பாராத விளைவுகளை விவரித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதனையும், அந்தக் கைத்தொழிலில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதனையும் கருத்திற்கொண்டே இந்தத் தீர்வை விதிக்கப்பட்டது. அந்த இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் தீர்வையின் செயல்திறனை மதிப்பீடு செய்தால், தீர்வைவரியானது ஒரு மகத்தான வெற்றியாகும்; அமெரிக்க துணிகழுவுதல் மற்றும் உலர்த்துதல் தொழில்துறையானது சுமார் 1,800 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியது. இது ஒரு வெற்றிக் கதையாக எளிதில் எழுதப்படலாம்.


சலவை இயந்திரங்களின் மீதான திட்டமிடப்படாத விளைவு (Cobra Effect)

எவ்வாறாயினும், இங்கே கவனம் தயாரிப்பாளர் மீது மட்டுமே உள்ளதுடன் நுகர்வோர் கதையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் திட்டமிடப்படாத விளைவு என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இப்போது அதிக விலை கொண்டவை என்பதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் விற்பனையை இழக்க நேரிடும் என்ற அச்சமின்றி பாதுகாப்பாக தங்கள் விலையை உயர்த்த முடிந்தது. இரண்டாவது திட்டமிடப்படாத விளைவு என்னவென்றால், உலர்த்திகளும் அதிக விலை கொண்டதாக மாறின. அமெரிக்காவில் சலவை இயந்திரங்களுக்கு ஒரு நிரப்பு நன்மை என்ற வகையில், உலர்த்தி உற்பத்தியாளர்கள் தங்கள் விலையை உயர்த்தவும், இலாபத்தை அதிகரிக்கவும் சரியான சாளரமாக இதைக் கண்டனர் (ஆடைத் தொழில்துறை இலங்கையை இந்த எதிர்பாராத விளைவுகளிலிருந்து காப்பாற்றும்).

 

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஃபோர்ப்ஸின் கருத்துப்டி இதனால், அமெரிக்க நுகர்வோர் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளனர். இந்த விலைவாசி அதிகரிப்பு மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் செலவு ஆகியவற்றை 1,800 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கியதன் மூலம் நியாயப்படுத்த முடியும் என்று ஒருவர் வாதிடலாம். உண்மை என்னவென்றால், ஒவ்வொரு வேலையும் அதிகரித்த நுகர்வோர் செலவில் 815,000 அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும். இந்த தீர்வைக் கொள்கையானது உள்ளூர் தொழில்துறையை தங்கள் சொந்த நுகர்வோரின் செலவில் திறம்படப் பாதுகாக்கிறது.


அமெரிக்காவில் சலவை இயந்திர விலைகளை இலங்கையர்கள் ஏன் கவனிக்க வேண்டும்?

இது திட்டமிடப்படாத விளைவுகளுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான எடுத்துக்காட்டாகத் தோன்றுகிறது என்பதையும், உள்நாட்டு நுகர்வோருக்கு இங்கு பாதிக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், சராசரி இலங்கை இதனை ஏன் கவனிக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களிடம் சன்லைட் சவர்க்காரமும் ஆடைத்துறையும் உள்ளன.

இலங்கை நுகர்வோர் கவலைப்பட வேண்டிய காரணம் என்னவென்றால் கடல் கடந்து அமெரிக்காவில் நிகழ்ந்த  அதே எதிர்பாராத விளைவுகள் இங்கே, நம் சிறிய தீவாகிய தேசத்திலும் நடைபெறுவதனால் ஆகும். தீர்வைவரி என்பது நீண்டகாலமாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் விருப்பமான கருவியாகும். தீர்வையானது ஆவணங்களில் மிகவும் நன்றாக இருக்கும், அந்த ஆவணமானது ஒரு தேர்தல் வாக்குறுதி அறிக்கை என்று குறிப்பிட்டால் நல்லது. ‘நாங்கள் எங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்போம்’ என்பது பல வாக்காளர்களின் மனதைக் கவரும் ஒரு வாக்குறுதியாகும். சிறந்த அச்சில் ‘உள்நாட்டு நுகர்வோரின் செலவில்’ என்பது விளம்பரப்படுத்தப்படும் ஒன்றல்ல, ஆனால் அது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வீட்டுப் பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் உணவு வரையிலான பொருட்களுக்குத் தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் காலணிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்ற வேறுபட்ட பொருட்களின் விலை இதனால் பாதிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு எவ்வாறு அதிகமாக உள்ளது என்பது குறித்து முழு நாடும் முறைப்பாடு செய்கின்றது, நியாயமற்ற முறையில் அதிக தீர்வைகள் இதற்குப் பின்னால் உள்ள இயக்கிகளில் ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக எங்களைப் பொறுத்தவரை, இந்தத் தீர்வைகளை விதிப்பது அமெரிக்க நுகர்வோர் எதிர்கொண்ட அதே தொடர்ச்சியான எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது. சராசரியாக இலங்கையரொருவர் வாராந்தம் பொருள்வாங்கி அதற்காகச் செலுத்தும் விலையானது, அது தெல்கந்தை சந்தையாகவிருப்பினும் சரி, நெருங்கிய பல்பொருள் அங்காடி அல்லது சந்தியிலுள்ள கடை எதுவாகவிருப்பினும் தீர்வைகளினால் பாதிக்கப்படுகின்றது. உருளைக்கிழங்கு, அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதற்கு இருக்க வேண்டிய விலையைவிட அதிக விலை கொண்டதாக இருக்கும், ஏனென்றால் தீர்வை வரிகள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையை உயர்த்துகின்றன, இது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நுகர்வோர் இழப்புடன் விலைகளை உயர்த்த அனுமதிக்கிறது.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தீர்வைகள் 45% முதல் 107.6% வரை இருக்கலாம். நமது பொருளாதாரத்தில் தீர்வைகளின் பங்கு,  அவற்றை விதிப்பற்குப் பின்னால் இருக்கும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட காரணம், தீர்வையின் பின்விளைவுகள் (அவை நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியதுடன் அவற்றைத் தள்ளுபடி செய்யவோ புறக்கணிக்கவோ முடியாது)  மற்றும் அவற்றை அகற்றுவதற்குத் துரிதமானதொரு பொறிமுறை ஆகியவற்றைப் பற்றித் தீவிரமாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்.