இறக்குமதி வரி எவ்வாறு வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
How import taxes drive up the cost of living

- ரவி ரத்னாசபபதி

" இந்தியா மற்றும் சீனா போன்ற ஜாம்பவான்களுக்கு பொருளாதாரத்தைத் திறப்பதற்கு முன்பு, தொழில்துறையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிறுவனங்களைப் பாதுகாக்க ஒரு ‘எதிர்மறை உற்பத்திப் பட்டியலை’ அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் தலையீட்டை இலங்கை இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கமானது (LCMA) தீவிரமாக நாடுகிறது." - டெய்லிஎஃப்டி 2017 செப்டம்பர், 25

மேற்கூறியவை இலங்கையில் பொதுவாக நடைபெறும்  ஒரு நிகழ்வாகிய - வெளிநாட்டுப் போட்டிகளிலிருந்து ஒரு கைத்தொழில்துறை பாதுகாப்பைத் தேடுதலுக்குரிய ஒரு உதாரணமாகும். இந்த பாதுகாப்பானது பொதுவாக ஒரு தீர்வையின் வடிவத்தை, அதாவது   இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புக்கு விதிக்கப்படும் ஆனால், அதன் உள்நாட்டு பிரதியீட்டிற்குப் பொருந்தாத   வரியின் வடிவத்தை எடுக்கும். மேற்கூறிய உதாரணத்தில், ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டாலும் கூட, தொழில்துறையினர் அனுபவிக்கும் தீர்வைப் பாதுகாப்பைத் தொடர வேண்டும் என்று இலங்கை இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கமானது (LCMA) கோருகிறது. (ஒரு FTA இன் “எதிர்மறை பட்டியலில்” உள்ள ஒரு பொருள் FTA க்கு உட்பட்டது அல்ல). உதாரணமாக, இறக்குமதி செய்யப்படும்         விசுக்கோத்துக்களுக்கு மொத்தம் 107% வரி விதிக்கப்படுகிறது, விசுக்கோத்துக்கள் எதிர்மறை பட்டியலில் இருந்தால், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்த வரி தொடரும்.

தீர்வைவரி விதிக்கப்பட்டாலும், இது பொதுவாக வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் தயாரிப்புக்கு வசூலிக்கும் விலையை குறைக்காது. எனவே இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியின் உள்நாட்டு விலை தீர்வையின் அளவுக்கு  உயர்கிறது.


இந்த இறக்குமதிகளுடன் போட்டியிடும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியை செலுத்த வேண்டியதில்லை, எனவே இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியை விட ஒரு நன்மை இருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை உயரும்போது, ​​உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த விற்பனை விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளனர், ஏனெனில் போட்டியிடும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இப்போது விலை அதிகம் ஆகும்.

உள்நாட்டுத் தயாரிப்பாளர் தனது விலையை உயர்த்துவாரா? ஆம், இல்லையெனில் எந்த அர்த்தமும் இல்லை. உள்நாட்டு உற்பத்தியாளர் தனது விலைகளை அதே மட்டத்தில் நிர்ணயித்தால், இறக்குமதிக்கு வரி விதிக்கப்படாவிட்டால், இறக்குமதியிலிருந்து தீர்வைப் பாதுகாப்பைப் பெறுவதில் எந்த அர்த்தமும் இருக்காது. உள்நாட்டு உற்பத்தியாளர் தனது தயாரிப்பை அதிக விலைக்கு விற்க உதவுவதே தீர்வையின் நோக்கமாகும். உள்நாட்டு உற்பத்தியாளர் தீர்வையின் விளைவாக முன்னரைவிடச் சிறந்த பயனைப் பெறுவார்.

நுகர்வோருக்கு என்ன நடக்கும்?

 தீர்வை விதிப்பதன் மூலம் உற்பத்தியின் உள்நாட்டு நுகர்வோர் சமமாகப் பாதிக்கப்படுகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளூர் தயாரிப்புக்கள் இரண்டிற்குமே அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டும்.

வேறு வசனங்களில் கூறுவதானால், உள்நாட்டு தொழில்துறைக்கான பாதுகாப்பு உண்மையில் உள்நாட்டு நுகர்வோரால் உயர்ந்த விலைகள் என்ற வடிவத்தில் செலுத்தப்படுகிறது.

தீர்வையை விதிக்கும் அரசாங்கத்தின் நிலை என்ன?

உள்ளூர் உற்பத்தியில் அவர்கள் சேகரிக்கவில்லை என்றாலும், எந்த அளவு இறக்குமதி செய்யப்பட்டாலும், அரசாங்கமானது தீர்வை வருமானத்தைச் சேகரிக்கிறது. இறக்குமதியின் விலையை உயர்த்துவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளருக்கு அரசாங்கம் உருவாக்கும் நன்மை உற்பத்தியாளரால் சேகரிக்கப்படுகிறது. இந்த மிகை "வாடகை" என்று அழைக்கப்படுகிறது, அவற்றில் மேலும் கீழே தரப்பட்டுள்ளது.

 தீர்வையை விதித்ததால், எங்களுக்கு இரண்டு உள்நாட்டு வெற்றியாளர்கள் (உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் அரசாங்கம்) மற்றும் ஒரு உள்நாட்டுத் தோல்வியடைந்தவரும் (உள்நாட்டு நுகர்வோர்) உள்ளனர்.

போட்டியிடும் இறக்குமதிகள் மீதான தீர்வைக்கு நுகர்வோரிடமிருந்து அதிக விலை வசூலிக்கக்கூடிய உள்ளூர் உற்பத்தியாளர் ஒரு "வாடகையை" அனுபவிப்பதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரத்தில், ஒரு “வாடகை” என்பது கண்டுபிடிக்கப்படாத வெகுமதியாகும். உற்பத்தியாளர்  அதிக விலை வசூலிக்க முடியும் என்பது உயர்ந்த தரம் அல்லது சேவையின் காரணமாக அல்ல, மாறாக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியினாலாகும்.

சிறந்த தரம் காரணமாக தயாரிப்பாளருக்கு அதிக விலை வசூலிக்க முடிந்தால், மலிவான இறக்குமதிகள் கிடைத்தாலும் கூட, தயாரிப்பாளர் அதிக விலையைப் பெறுவார். இங்கு ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது.

நுகர்வோர் அதிக விலையுயர்ந்த பொருளை மட்டுமே வாங்குவர், அதே நேரத்தில் அவர்கள் பெறுவதை மதிப்பிட்டால் மட்டுமே குறைந்த விலையிலான பொருட்கள் கிடைக்கின்றன. உற்பத்தியாளர் தமது உற்பத்தி சிறந்தது மற்றும் அதிக விலை கொடுக்க வேண்டியது என்று நுகர்வோரை நம்ப வைக்க கூடுதலாக எதையாவது செய்ய வேண்டும்.

ஒரு தீர்வையானது இறக்குமதியின் விலையை உயர்த்தும்போது, ​​உள்ளூர் உற்பத்தியாளர்கள் நுகர்வோருக்கு பெறுமதியை அதிகரிக்காமல் அதிக விலைகளை வசூலிக்க முடியும். ஒரு தெரிவினைக் கொடுத்தால், நுகர்வோர் மலிவான மாற்று வழிகளைத் தேர்வுசெய்யலாம் - ஆனால் மாற்றுவழி இனி மலிவானதல்ல என்பதை தீர்வையானது உறுதி செய்கிறது. இதனால் நுகர்வோர் விரும்பாவிட்டாலும் மாற்றுவழி இல்லாததால், அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால்தான் இந்த உதாரணத்தில் உயர்மதிப்பானது உழைக்கப்படாதது என்று கூறப்படுகிறது. நுகர்வோர் சிறந்த பெறுமதியை உணராதபோதிலும் அதிக விலையைச் செலுத்துகிறார்கள்.

இதனால் உற்பத்தியாளர்கள் நுகர்வோரின் செலவில் இலாபமடைகின்றனர். முன்னர் குறிப்பிட்டபடி, உள்நாட்டு தொழில்களின் பாதுகாப்பிற்காக பணம் செலுத்துவது உள்நாட்டு நுகர்வோர் (வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் அல்ல) ஆவர். நிகர தாக்கம் என்பது நுகர்வோரிடமிருந்து உற்பத்தியாளருக்கு செல்வத்தை மாற்றுவதாகும், இது தீர்வையால் வசதி செய்யப்படுகிறது. இது சிறந்ததொரு கொள்கையாகுமா?

இது ஒரு சில தொழில்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், அது முக்கியமானதல்ல, ஆனால் இலங்கையில் இது எல்லாவற்றிலும் பரவலாக உள்ளது. பாதிக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பொதுவான வீட்டு பொருட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது ஒரு தெரிவு மட்டுமே-ஏனைய பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகமாக உள்ளது என்பதை இது விளக்குகிறது. உணவு (பழம், இறைச்சிகள், பாஸ்தா, பழப்பாகு) முதல் கழிப்பறைப் பொருட்கள் (சவர்க்காரம், ஷாம்பூ, பற்பசை) முதல் வீட்டு பொருட்கள் வரை அனைத்து தேவையான பொருட்களுக்கும் 62% -101% வரை வரிகள் அறவிடப்படுகின்றன.

Untitled design (11).png

உள்நாட்டுத் தொழில்களை ஆதரிப்பதற்காக இலங்கை நுகர்வோர் அதிக வாழ்க்கைச் செலவை அனுபவிக்கின்றனர். ஒரு தொழில்துறை தளத்தை உருவாக்க உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிப்பது நீண்ட காலத்தில் வளர்ச்சியை துரிதப்படுத்துமா என ஒரு விவாதம் உள்ளது.

யப்பான், கொரியா மற்றும் தாய்வான் ஆகியன கைத்தொழில் கொள்கையை (IP) கடைப்பிடித்தன, ஆனால் கொள்கையின் ஆதரவாளர்கள் கூட சரியான கைத்தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கவனிப்பு தேவை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். யப்பான் மற்றும் கொரியாவில் உருக்கு, கப்பல் கட்டுதல், கனரக மின் உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள் மற்றும் பின்னர் வந்த கார்கள் ஆகியன முக்கிய தொழில்களாகும். கனரக மற்றும் இரசாயனத் தொழில்கள் மற்றும் இலத்திரனியல் கைத்தொழில்களுக்குச் செல்வதற்கு முன்பு தாய்வானில் இலகு உற்பத்தி (மின் உபகரணங்கள், துணி) இருந்தது.

சவர்க்காரம், ஷாம்பூ, சலவை தூள், தரை மினுமினுப்பாக்கி, பாஸ்தா, பாலாடைக் கட்டி மற்றும் விசுக்கோத்துக்கள் போன்ற கழிப்பறை, வீட்டு சுத்திகரிப்புப் பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் இலங்கை இதைப் பின்பற்ற விரும்புகிறது.

Untitled design (12).png

வெற்றியடைவதற்கு, கைத்தொழில் கொள்கைகள் பொருளாதாரத்தில் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை வளர்க்க வேண்டும், இது தொழில்வாய்ப்புக்களை, குறிப்பாக அதிக வினைத்திறன் வாய்ந்த சிறந்த தொழில்வாய்ப்புக்களை  விரைவாக உருவாக்க வழிவகுக்கிறது. சரியான கைத்தொழில்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும்.

"நாட்டின் தொழில்நுட்ப இயல்திறன்கள் மற்றும் உலகச் சந்தை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இலக்குத் தொழில்கள் எவ்வளவு யதார்த்தமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது முக்கியமானதாகும்" [1]

க்ருக்மேன் [2] துறைகளைத் தேர்ந்தெடுப்பதில் கைத்தொழில் கொள்கை வகுப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட சில அளவுகோல்களை சுருக்கமாகக் கூறுகிறார்:

ஒரு தொழிலாளிக்கு அதிக பெறுமதி சேர்க்கப்பட்டவை. பணியாளருக்கு அதிக  பெறுமதி சேர்க்கும் வணிகங்களுக்கு வளங்கள் பாய்ந்தால் மட்டுமே உண்மையான வருமானம் உயர முடியும்.

  1. ஒரு தொழிலாளிக்கு அதிக பெறுமதி சேர்க்கப்பட்டவை. பணியாளருக்கு அதிக  பெறுமதி சேர்க்கும் வணிகங்களுக்கு வளங்கள் பாய்ந்தால் மட்டுமே உண்மையான வருமானம் உயர முடியும்.

  2. உருக்கு மற்றும் குறைகடத்திகள் போன்ற இணைப்புத் தொழில்கள். பிற தொழில்களால் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்படும் கைத்தொழில்கள் கைத்தொழில்மயமாக்கலின் சுழற்சியை உருவாக்க முடியும். யப்பானில் மலிவான, உயர்தர உருக்கானது, மூலப்பொருள் தயாரிக்கும்  கைத்தொழில்கள்-கப்பல்கள், மோட்டார்வாகனங்கள், தண்டவாளங்கள், என்ஜின்கள், கனரக மின் சாதனங்கள் ஆகியவற்றில் ஒரு போட்டி நன்மையைக் கொடுத்தது.

  3. உலக சந்தைகளில் தற்போதைய அல்லது எதிர்கால போட்டித்திறன். கைத்தொழிலானது இந்த பரீட்சையைச் சந்திக்க முடிந்தால், வளங்கள் திறமையாக ஒதுக்கப்படுகின்றன என்று நாம் கருதலாம். இணைப்பு நன்மைகள் பாய்வதற்கு போட்டித்திறன் முக்கியமானது.


அளவிலான பொருளாதாரங்களை அடைவதற்கு தெரிவுசெய்யப்பட்ட கைத்தொழில்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொள்ள வேண்டும் (விசேடமாக இல்லாவிட்டாலும்) - ஏனெனில் இது "அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனைத் தீர்மானிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு உறுதியான அளவுகோலை" வழங்குகிறது [3]. இலத்தீன் அமெரிக்காவில் கைத்தொழில் கொள்கை தோல்வியடைவதற்கு ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் ஏற்பட்ட தோல்வியானது முக்கிய காரணமாகும். (சாங், 2009)

ஏற்றுமதியை நோக்கிய தன்மை கொண்ட போட்டித்தன்மையையும் உறுதி செய்கிறது. கொள்கையின் நோக்கம் திறமையின்மையைப் பாதுகாப்பதல்ல, ஆனால் உற்பத்தித்திறனை மேம்படுத்துதலாகும்.

எனவே தொழில்துறைக்கான ஆதரவு நிபந்தனைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

"கைத்தொழில் கொள்கையின் முடிவுகள் (அல்லது உண்மையில் எந்தவொரு பொதுவான கொள்கையின்) விமர்சன ரீதியாக விரும்பிய முடிவை எவ்வளவு திறம்பட அரசு கண்காணிக்க முடியும் என்பதிலும், வளர்ந்து வரும் பெறுபேறுகளைக் கருத்திற்கொண்டு ஒதுக்கீடு மற்றும் உதவி விதிமுறைகளை மாற்றுவதிலும் தங்கியுள்ளது" [4]

யப்பான் மற்றும் கொரியாவில் கலந்துரையாடல் கவுன்சில்கள் அமைக்கப்பட்டன, அவை கைத்தொழிலில் இலக்குகளை நிர்ணயிக்கும். இலக்குகள் கடுமையானவை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிறரையும் ஈடுபடுத்தினர்.

செயல்திறன் கண்காணிக்கப்படுவதுடன் இலக்குகள் திருத்தப்படும். ஒரு கொள்கையானது பயனற்றதாகக் காணப்படும் போது அது திருத்தப்படும். கைத்தொழில் கொள்கை என்பது வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தோல்வியுற்றவர்களை வெளியேற்றுவதும் ஆகும்.

"கைத்தொழில் கொள்கையின் வெற்றியானது, பல்வேறு கொள்கை வழிமுறைகள் (தீர்வைகள், மானியங்கள், நுழைவுத் தடைகள்) மூலம் அது உருவாக்கும் வாடகைகளைப் பெறுபவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் எவ்வளவு விருப்பமும் திறமையும் கொண்டது என்பதில் தங்கியுள்ளது. கைத்தொழில் கொள்கையை நடத்துவதில் தவிர்க்க முடியாத சந்தை ஒழுக்கத்தை இடைநிறுத்துவது என்பது அரசாங்கம் ஒரு ஒழுக்கத்தை நிலைநாட்டுபவரின் பங்கை வகிக்க வேண்டும் என்பதே கருத்தாகும் ”[5].

கைத்தொழிற்துறைக்கான ஆதரவு குறித்து பக்கச்சார்பற்ற முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு அதிகாரத்துவம் தேவைப்படுகிறது - மேலும் செயல்திறனைப் பொறுத்து ஆதரவை மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ வேண்டும்.

"அரசாங்கம் அதன் பணயக்கைதியாக மாறாமல் தனியார் துறையுடன் எவ்வளவு நெருக்கமாக தொடர்பு கொள்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்." [6]

வெற்றிகரமான கைத்தொழில் கொள்கை என்பது கைத்தொழில் மற்றும் அரசிற்கிடையிலான ஒரு அதிநவீன கூட்டாண்மை என்பது தெளிவாகிறது, இது போட்டி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் நடப்பது கிழக்கு ஆசியாவைப் போலல்லாமல் இலத்தீன் அமெரிக்காவைப் போன்றதாகும்.

"குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் இறக்குமதி மாற்றுக் கொள்கைகளுக்கு ஒரு கெட்ட பெயர் கிடைத்தது, ஏனெனில் உருவாக்கப்பட்ட தொழில்கள் பெரும்பாலும் பாதுகாப்பின் விளைவாக மட்டுமே தப்பிப்பிழைத்தன. நாடுகள் இடைநிலை பொருட்களைப் பாதுகாப்பது மிகவும் விலை உயர்ந்ததாகும், ஏனென்றால் அது பொருட்களின் தரத்தைக் குறைத்து உற்பத்திச் சங்கிலியைக் குறைவாகப் போட்டிக்கு உட்படுத்தியது. இந்த வகையான பாதுகாப்புவாதத்திற்கு நாடுகள் பெரும்பாலும் அதிக விலை கொடுத்தன, மேலும் இந்த பாதுகாப்பைப் பராமரிப்பது பெரும்பாலும் ஊழலுடன் தொடர்புடையதாகும். ” [7]


[1] Chang, H. J, 2006. Industrial policy in East Asia – lessons for Europe. An industrial policy for Europe? From concepts to action EIB Papers, [Online]. Vol 2 No.6, 106-132. (Accessed 07 January 2019)

[2] Paul R. Krugman, 1983. Targeted Industrial Policies: Theory and Evidence. [Online] (Accessed 07 January 2019)

[3] Ibid

[4] M Khan, 2018. The Role of Industrial Policy:Lessons from Asia. [Online] (Accessed 07 January 2019)

[5] Ibid

[6] Ibid

[7] Joseph E. Stiglitz. Industrial Policy, Learning, and Development. [Online] (Accessed 07 January 2019)